Advertisement

கனமழை...புனே மாவட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை

By: vaithegi Fri, 15 July 2022 10:39:15 AM

கனமழை...புனே மாவட்ட பள்ளிகளுக்கு  தொடர் விடுமுறை

புனே : இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் பல நகரங்கள், கிராமங்களில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை தொடர்ந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வரும் நிலையில் புனே மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடக்வாஸ்தா ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது.

மேலும் சமீபத்தில் முக்தா ஆற்றை கடக்க முயன்றவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதனால் புனே மாவட்டத்தில் உள்ள நீர்நிலை சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா தளங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

holiday,pune,heavy rain ,விடுமுறை,புனே ,கனமழை

இக்கனமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மும்பை, புனே உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

தற்போது புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்கள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர், பாராமதி, டவுண்ட், ஷிரூர் மற்றும் புரந்தர் ஆகிய தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகள் மட்டும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags :
|