Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

By: Karunakaran Wed, 23 Sept 2020 3:47:38 PM

வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவ தொடங்க ஆரம்பித்தபோதே, கடந்த மார்ச் மாதம் முதல் அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் நாளடைவில் அங்கு தொற்று குறைய தொடங்கியதால், ஊரடங்கை விலக்கிக்கொண்ட அரசு, பள்ளி-கல்லூரிகளை திறந்தது. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,98,625 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 41,788 உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுச்சபையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசுகையில், இங்கிலாந்து தற்போது ஒரு ஆபத்தான திருப்புமுனையை எட்டியுள்ளது. எனவே நாம் புதிய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தாக வேண்டும். அதன்படி பார்கள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் அனைத்தும் நாளை முதல் இரவு 10 மணி வரையே செயல்பட வேண்டும். திருமணங்களில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கை 30-ல் இருந்து 15 ஆக குறைக்கப்படுகிறது என்று கூறினார்.

work,home,uk,boris johnson ,வேலை, வீடு, இங்கிலாந்து, போரிஸ் ஜான்சன்

விளையாட்டு மைதானம், விளையாட்டு கிளப்புகள் திறப்பது ரத்து செய்யப்படுவதாகவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திறக்கலாம் என்றும், நிறுவனங்களின் ஊழியர்கள் முடிந்தால் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

மேலும் அவர், அனைவரும் முக கவசங்கள் கண்டிப்பாக அணிய வேண்டும். தவறுவோருக்கு அபராதம் இரு மடங்காக அதாவது 200 பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் 6 மாதங்கள் வரை நீடிக்கும். ஆனால் தொற்று அதிகரித்தால், மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறினார்.

Tags :
|
|
|