Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் கனமழை.. டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொடர் கனமழை.. டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

By: vaithegi Wed, 29 Nov 2023 4:09:28 PM

தொடர் கனமழை..  டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: கனமழையால் வீரியமடையும் டெங்கு ....தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து இரவும், பகலுமாய் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி டெங்கு கொசு புழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நாள்தோறும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டு வருகிறது.

அதிலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழப்புகளும் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.

dengue,heavy rain ,  டெங்கு,கனமழை

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முகாம்கள் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவும் என்பதால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் சாதாரண சளி,

இருமல் காய்ச்சல் என்றாலும் கூட முகாம்கள் மூலமாக சரியான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்படி சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது. மேலும், வீட்டை சுற்றி மழைநீர் தேங்காத வகையில் கவனித்துக்கொண்டாலே டெங்கு தொற்றிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

Tags :
|