Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்ன எதிர்ப்பு வந்தாலும் நிறுத்த மாட்டோம் என்பது போல் தொடர்ந்து ஏவுகணை சோதனை

என்ன எதிர்ப்பு வந்தாலும் நிறுத்த மாட்டோம் என்பது போல் தொடர்ந்து ஏவுகணை சோதனை

By: Nagaraj Mon, 27 Mar 2023 11:07:55 PM

என்ன எதிர்ப்பு வந்தாலும் நிறுத்த மாட்டோம் என்பது போல் தொடர்ந்து ஏவுகணை சோதனை

சியோல்: வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என மிரட்டி வரும் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் பெரிய அளவிலான கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. இது வடகொரியாவை மேலும் கோபமடைய செய்துள்ளது.

missile,test,world countries. north korea, ,உலக நாடுகள் .வடகொரியா, ஏவுகணை, சோதனை

இதனையடுத்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட, ஒரு செயற்கை கதிரியக்க சுனாமியை உண்டாக்கும் ஆயுதம் சோதனை செய்யப்பட்டு கடலுக்கு அடியில் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அத்துமீறி வரும் வடகொரியா இன்று மேலும் 2 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 7.47 மற்றும் 8 மணிக்கு ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டது. ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை தாண்டி கடலில் ஏவுகணை விழுந்ததாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரியாவின் புசான் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் நங்கூரமிட்டு நின்ற நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியது.

Tags :
|