Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடரும் மழை ... வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடரும் மழை ... வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Mon, 19 June 2023 10:10:13 AM

தொடரும் மழை ...  வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. குறிப்பாக இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தது. இதற்கேற்ப சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

holiday,vellore,ranipet ,விடுமுறை,வேலூர், ராணிப்பேட்டை


இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு என பல்வேறு பகுதிகளில் இரவு தொடங்கிய மழை, பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் தொடர்ந்து பெய்து வந்தது. காலை வரை மழை தொடர்ந்ததால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகளிக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

தற்போது வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளிலும் மழை தொடர்வதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இருந்தாலும், மேற்கண்ட 6 மாவட்டங்களிலும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்களுக்கு இன்று அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டு உள்ளது.

Tags :