Advertisement

தொடர் மழை ... காய்கறிகளின் விலை கடுமையாக உயர்வு

By: vaithegi Fri, 13 Oct 2023 4:14:55 PM

தொடர் மழை ... காய்கறிகளின் விலை கடுமையாக உயர்வு


சென்னை: தமிழகத்தில் பருவமழை துவங்கி உள்ள நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் என்னென்ன விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது, அவரைக்காய் கிலோ ரூ.60க்கும், நெல்லிக்காய் ரூ. 89க்கும், மக்காசோளம் ரூ. 85க்கும், பீன்ஸ் ரூ. 70க்கும், பாகற்காய் ரூ. 30-க்கும், கத்தரிக்காய் ரூ. 35க்கும், முட்டைக்கோஸ் ரூ. 10க்கும், குடைமிளகாய் ரூ. 40க்கும், காலிஃப்ளவர் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

price of vegetables,rain , காய்கறிகளின் விலை ,மழை

இதனை அடுத்து, வெள்ளரிக்காய் ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ. 60க்கும், பூண்டு ரூ. 150 க்கும், இஞ்சி ரூ. 240க்கும், பச்சை மிளகாய் ரூ.65க்கும், பெரிய வெங்காயம் ரூ.30க்கும், சாம்பார் வெங்காயம் ரூ. 85க்கும், உருளைக்கிழங்கு ரூ. 30 க்கும்,

மேலும் முள்ளங்கி ரூ. 50க்கும், புடலங்காய் ரூ. 50க்கும், தக்காளி ரூ. 18க்கும், வாழைப்பூ ரூ. 25க்கும், வாழைத்தண்டு ரூ. 60க்கும், பூசணிக்காய் ரூ. 20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்து வந்தால் காய்கறிகளின் விலை இன்னும் உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags :