Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சம்...மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3041 பேர் பாதிப்பு

நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சம்...மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3041 பேர் பாதிப்பு

By: Monisha Mon, 25 May 2020 3:41:09 PM

நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சம்...மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3041 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

maharashtra,coronavirus,india,3041 victims in one day,curfew ,மகாராஷ்டிரா,கொரோனா வைரஸ்,இந்தியா,ஒரே நாளில் 3041 பேர் பாதிப்பு,ஊரடங்கு

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3041 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 50231 ஆக உயர்ந்துளள்து. கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1635 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|