Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கை முற்றிலும் நீக்க ஜெர்மனி முடிவு; சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தீர்மானம்

ஊரடங்கை முற்றிலும் நீக்க ஜெர்மனி முடிவு; சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தீர்மானம்

By: Nagaraj Fri, 08 May 2020 1:43:21 PM

ஊரடங்கை முற்றிலும் நீக்க ஜெர்மனி முடிவு; சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தீர்மானம்

ஊரடங்கினை முற்றிலும் நீக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் ஜெர்மனி ஆயிரக்கணக்கில் உயிரிழப்பையும் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் ஊரடங்கினை முற்றிலும் நீக்கவுள்ளது. இது தொடர்பாக ஜெர்மன் பிரதம்ர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் மாகாணங்களின் கவர்னர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் தொழில் செயல்பாடுகளை மீட்டெடுத்தல் போன்றவை குறித்து பேசப்பட்டன.

population,germany,corona,curfew,playgrounds ,மக்கள்தொகை, ஜெர்மனி, கொரோனா, ஊரடங்கு, விளையாட்டு மைதானங்கள்

இக்கூட்டத்தில் ஏஞ்ஜெலா பேசுகையில்,'ஜெர்மனியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள் பள்ளிகள், ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.' இவ்வாறு அவர் தெரிவித்தார்

சென்ற வாரம் அந்நாட்டில் சர்ச்கள், விளையாட்டு மைதானங்கள், மியூசியங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினை முற்றிலும நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.

population,germany,corona,curfew,playgrounds ,மக்கள்தொகை, ஜெர்மனி, கொரோனா, ஊரடங்கு, விளையாட்டு மைதானங்கள்

அதேசமயம் ஊரடங்கு நீக்கத்திற்கு பிறகு 1 லட்சம் பேரில் 50 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டாலும் மீண்டும் ஊரடங்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

8.3 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் 1,68,000 பேர் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 1,32,000 பேர் குணமடைந்தனர். அந்நாட்டில் 7,725 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Tags :
|
|