Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பணவீக்கத்தால் சர்ச்சை நிலைமை... கனடா எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

பணவீக்கத்தால் சர்ச்சை நிலைமை... கனடா எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 08 June 2022 10:56:08 AM

பணவீக்கத்தால் சர்ச்சை நிலைமை... கனடா எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

கனடா: எதிர்கட்சிகள் கோரிக்கை... கனடாவில் நிலவி வரும் பணவீக்க நிலைமை காரணமாக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளதுடன் இதற்கான தீர்வினை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

பணவீக்கப் பிரச்சினை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பனவற்றுக்கு தீர்வு வழங்குமாறு சமஷ்டி அரசாங்கத்திடம், என்.டி.பி. மற்றும் என்.டி.பி கட்சி என்பன கோரிக்கை விடுத்துள்ளன. பெட்ரோல், டீசல் என்பனவற்றுக்கான பெறுமதி சேர் வரியை தற்காலிகமாக நிறுத்துமாறு கன்சர்வேட்டிவ் கட்சி கோரியுள்ளது. கார்பன் வெளியீட்டு வரியை இடைநிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குதவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேணடுமென சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சில மாகாணங்களில் ஒரு பெட்ரோல், பெற்றோலுக்கு இரண்டு டொலர்களுக்கு மக்கள் செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

petrol,opposition,people,relief,charity,crisis ,
பெட்ரோல், எதிர்கட்சிகள், மக்கள், நிவாரணங்கள், அறவீடு, நெருக்கடி

மக்கள் வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில் லிபரல் அரசாங்கம் வரிகளை குறைக்க முன்வரவில்லை என கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் கென்டிஸ் பேர்கர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாரியளவு லாபமீட்டும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மீது கூடுதல் வரிகளை அறவீடு செய்து அதன் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|
|