ராகுல் நடைப்பயணத்தில் வைக்கப்பட்ட பேனரால் ஏற்பட்ட சர்ச்சை
By: Nagaraj Fri, 07 Oct 2022 3:23:23 PM
மண்டியா: பேனரால் ஏற்பட்ட சர்ச்சை... கர்நாடகாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது சாவர்க்கரின் படத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டது.
காந்தி தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று மாண்டியா மாவட்டத்தில் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார்.
நடைபயணத்தின் போது மாவட்டத்தில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த பேனர்களில் தலைவர்களின் படங்களுடன் வீர சாவர்க்கர் படமும் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை அகற்றினர். பேரணியில் குழப்பம் விளைவிப்பதற்காக சமூக விரோதிகள் சிலர் பேனர்களை வைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags :
banner |