Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் தகராறு

டெல்லியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் தகராறு

By: Nagaraj Fri, 24 Feb 2023 10:53:23 PM

டெல்லியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் தகராறு

புதுடெல்லி: டெல்லியில் மாநகராட்சி தேர்தலில் 6 நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய உடனேயே அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை குறித்த சர்ச்சை, ஆம் ஆத்மி-பாஜக மோதல், நீதிமன்ற வழக்குகள் போன்ற காரணங்களால் மேயர் தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வந்தது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய், துணை மேயராக அலே முகமது இக்பால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் 6 நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய உடனேயே அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடவில்லை. இதனால் ஆம் ஆத்மி, பா.ஜ.க., இடையே மோதல் ஏற்பட்டதால், நேற்று தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் கவுன்சில் கூடியதும் நிலைக்குழு தேர்தல் நடைபெற்றது.

chant,corporation,new delhi , கூச்சல், புதுடெல்லி, மாநகராட்சி

ஆம் ஆத்மி 4 வேட்பாளர்களையும், பாஜக 2 வேட்பாளர்களையும் நிறுத்தியது. பாஜகவில் இணைந்த சுயேச்சை உறுப்பினர் கஜேந்தர் சிங்கராலும் வேட்பாளராகப் போட்டியிட்டார். 6 நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், ஒரு உறுப்பினரின் வாக்கு செல்லாது என மேயர் அறிவித்தார். இதை ஏற்க மறுத்த பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம், பிரதமர் மோடி வாழ்க என்று கோஷமிட்டனர். இதற்கு பதிலடியாக ஆம் ஆத்மி உறுப்பினர்களும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷமிட்டனர்.

இரு தரப்பினரும் கண்ணாடி மீது நின்று கூச்சலிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. மாநகராட்சி நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எந்தத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்? நிலைக்குழு முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|