Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோ பிடன் ஒரு கிரிமினல் என ஜனாதிபதி டிரம்ப் கூறியதால் சர்ச்சை

ஜோ பிடன் ஒரு கிரிமினல் என ஜனாதிபதி டிரம்ப் கூறியதால் சர்ச்சை

By: Karunakaran Tue, 20 Oct 2020 1:48:29 PM

ஜோ பிடன் ஒரு கிரிமினல் என ஜனாதிபதி டிரம்ப் கூறியதால் சர்ச்சை

அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்பிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட ராய்டர்ஸ் செய்தியாளர் ஜெஃப் மேசனை ஒரு கிரிமினல் என்று வசை பாடிய டிரம்ப், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பிடனும் ஒரு கிரிமினல் என்று கூறினார். அப்போது அதிபர் டிரம்ப், நீங்கள் ஒரு குற்றவாளி. நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், ஜோ பிடன் ஒரு குற்றவாளி என கூறினார்.

controversy,president trump,joe biden,criminal ,சர்ச்சை, அதிபர் டிரம்ப், ஜோ பிடன், குற்றவாளி

மேலும் அவர், ஜோ பிடன் நீண்ட காலமாக ஒரு குற்றவாளியாக இருக்கிறார், அதைப் புகாரளிக்காததற்காக நீங்கள் ஒரு குற்றவாளி மற்றும் உங்கள் ஊடகமாகும். அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம். ஒரு நல்ல நேரம் கிடைக்கும் என கூறினார்.

அதிபர் டிரம்ப் மேலும் கூறுகையில், அமெரிக்க நோய்த்தொற்று நிபுணர் டாக்டர். அந்தோணி ஃபாசி மற்றும் பிற நிபுணர்களை முட்டாள்கள் என அழைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் பல்வேறு குற்றச்சாட்டிகளை கூறி வருவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Tags :