Advertisement

சீன அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை

By: Nagaraj Thu, 13 Oct 2022 7:45:48 PM

சீன அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை

பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீன அரசின் கொரோனா வைரஸ் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சீன அதிபர் பதவி விலகக் கோரியும் பேனர் ஒன்று பெய்ஜிங்கில் நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள மேம்பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.

banner,chinese,flyover,president, ,குறிப்பிடத்தக்கது, சீனாவில் ஜி ஜின்பிங், பெய்ஜிங், பேனர், போலீஸ் பாதுகாப்பு

அந்த இடத்தில் நெருப்பு எரிவதையும் சிலர் பார்த்துள்ளனர். இதை செய்தது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர். பேனர் வைத்திருப்பவர்கள் குறித்து யாரும் நேரில் புகார் தெரிவிக்காததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சீன அரசு இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி வருகிறது. சில பதிவுகளில் பேனர் வைத்திருக்கும் நபர்களின் துணிச்சலை சிலர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags :
|