Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ் லோகோவை கொரோனா வைரஸ் போல் சித்தரித்ததால் சர்ச்சை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் லோகோவை கொரோனா வைரஸ் போல் சித்தரித்ததால் சர்ச்சை

By: Nagaraj Fri, 22 May 2020 10:21:53 AM

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் லோகோவை கொரோனா வைரஸ் போல் சித்தரித்ததால் சர்ச்சை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 லோகோவை கொரோனா வைரஸ் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது ஜப்பானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து அதனை இணையத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வெளிநாட்டு தொடர்பாளர்கள் கிளப் (FCCJ) சார்பாக வெளியிடப்படும் பத்திரிக்கையில் டோக்கியோ ஒலிம்பிக் 2020 சின்னத்தை கொரோனா வைரஸாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து FCCJ தலைவர் கால்டோன் அஜாரி கேலியாக சித்தரிக்கப்பட்ட ஒலிம்பிக் லோகோவை தங்கள் இணைய தளத்திலிருந்து நீக்கி விடுவதாக தெரிவித்துள்ளார்.

controversy,logo,olympics,internet,removal,mockery ,
சர்ச்சை, லோகோ, ஒலிம்பிக்ஸ், இணையம், நீக்கம், கேலி

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

'கொரோனாவை எதிர்த்து நாம் போராடும் வேளையில் இது போன்ற கேலியாக சித்தரிக்கப்பட்ட லோகோவுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன். இது காப்புரிமையை மீறும் விஷயமாக உள்ளது. இது போன்ற விஷயங்கள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமின்மையை கொடுக்கும்.

மேலும், இந்த லோகோ பெல்ஜியத்தின் லீகேயில் உள்ள ஒரு தியேட்டரின் லோகோவை ஒத்திருப்பதால் காப்புரிமை மீறல் விஷயமாக இருப்பதால் இது நீக்கப்படுகிறது' இவ்வாறு அவர் கூறினார்.

ஜப்பானில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா காரணமாக அடுத்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|