Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஷார்ஜா மைதானத்தின் சென்டிமென்டை உடைத்தெறியுமா கூல் கேப்டனின் முடிவு!!!

ஷார்ஜா மைதானத்தின் சென்டிமென்டை உடைத்தெறியுமா கூல் கேப்டனின் முடிவு!!!

By: Nagaraj Tue, 22 Sept 2020 8:09:50 PM

ஷார்ஜா மைதானத்தின் சென்டிமென்டை உடைத்தெறியுமா கூல் கேப்டனின் முடிவு!!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஷார்ஜா மைதானத்தில் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்வதுதான் சிறந்தது என்ற சென்டிமென்டை கூல் கேப்டன் தோனியின் முடிவு மாற்றுமா என்பது தெரிந்து விடும்.

ஐபிஎல் போட்டியில் ஷார்ஜாவில் இன்று நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 13-வது ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அபு தாபியில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. அந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி சேஸிங் செய்தது.

இந்நிலையில் இன்று ஷார்ஜா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்பதி ராயுடுவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வகையில் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

cool captain,end,sharjah,sentiment ,கூல் கேப்டன், முடிவு, ஷார்ஜா, சென்டிமென்ட்

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை இந்தப் போட்டி அந்த அணிக்கு முதல் ஆட்டமாகும். அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தவிர்த்து டேவிட் மில்லர், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் கரன் ஆகியோர் இருக்கின்றனர். இதில் டாம் கரன், ஆர்ச்சர் இருவரும் நல்ல பந்துவீச்சாளர்கள். ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்ஸனுக்கு இது 150-வது ஐபிஎல் போட்டியாகும்.

கொல்கத்தா அணியிலிருந்த ராபின் உத்தப்பா ராஜஸ்தான் அணிக்கு வந்துள்ளார். அவரின் ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணியில் இருக்கும் இளம் வீரர் படிக்கல் போல், ராஜஸ்தான் அணியிலும் யாஸ்ஹஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கிறார். பானிபூரி விற்பனை செய்து கிரிக்கெட் பயிற்சி எடுத்து அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாகும். இங்கு சராசரியாக 150 முதல் 160 ரன்கள் வரை ஓர் அணியால் சேர்க்க முடியும். பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்வதுதான் சிறந்தது. ஏனென்றால், இங்கு நடந்த 14 ஆட்டங்களில் 9 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. 4 ஆட்டங்களில் மட்டுமே சேஸிங் செய்த அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கூல் கேப்டன் தோனியின் முடிவுகள் எப்போதும் அவருக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|