Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்கறிகடைகளில் கொசுறாக கொடுத்த கொத்தமல்லி... இன்னைக்கு விற்குது செம "கெத்தாக"

காய்கறிகடைகளில் கொசுறாக கொடுத்த கொத்தமல்லி... இன்னைக்கு விற்குது செம "கெத்தாக"

By: Nagaraj Wed, 13 May 2020 11:21:54 PM

காய்கறிகடைகளில் கொசுறாக கொடுத்த கொத்தமல்லி... இன்னைக்கு விற்குது செம "கெத்தாக"

கொசுறாக கொடுத்த கொத்தமல்லி இன்று கிராம் கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.

நுாறு ரூபாய்க்கு ஒரே வியாபாரியிடம் காய்கறி வாங்கினால், ஐந்து ரூபாய் மதிப்புள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி இலவசமாக கிடைக்கும். இதுதான்காய்கறி சந்தையின் இலக்கணம். கிராமத்தில் இதை கொசுறு என்பார்கள். இப்போது மல்லிதழையின் விலை
கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

coriander,vegetable,cocoon,news ,கறிவேப்பிலை, கொத்தமல்லி, கொசுறு, கிலோ


அதனால், கடைக்காரர்களும் கொசுறாக தருவதை நிறுத்தியுள்ளனர்.
50 கிராம், 100 கிராம் என எடையிட்டே, மல்லி தழையை விற்கின்றனர். கறிவேப்பிலை கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில் ஒரு கட்டு கொத்தம்ல்லி 10ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறோம். தொடர்ந்து காய்கறி வாங்குபவர்களுக்கு கொசுறாக காசில்லாமல் கொடுத்தோம்.

ஆனால் இப்போது விலை அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்களாக இருந்தாலும் கிராம் கணக்கில்தான் கொடுக்கும் நிலை உள்ளது.

Tags :
|