Advertisement

டெல்லியில் ஒரே நாளில் 1,142 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sat, 25 July 2020 8:43:06 PM

டெல்லியில் ஒரே நாளில் 1,142 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, ஊரடங்கு உத்தரவு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று 1,142 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை, 1,29,531 ஆக உயர்ந்து உள்ளது.

delhi,corona virus,corona death,corona prevalence ,டெல்லி, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

டெல்லியில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 2,137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 12,657 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 659 ஆக உள்ளது.

டெல்லியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 9,943 ஆக உள்ளது. மேலும் அங்கு இதுவரை 7 லட்சத்து 36 ஆயிரத்து 436 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் அதிகம் பாதிப்பில் உள்ளது.

Tags :
|