Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தானே மாவட்டத்தில் ஒரே நாளில் 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு

தானே மாவட்டத்தில் ஒரே நாளில் 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sat, 18 July 2020 11:21:28 AM

தானே மாவட்டத்தில் ஒரே நாளில் 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து விட்டது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,707 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.

thane,corona virus,corona prevalence,maharastra ,தானே, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, மகாராஷ்டிரா

தானே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பினால் 53 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 1,827 ஆக உயர்ந்தது. தானே மாவட்டத்திற்கு பக்கத்து மாவட்டமான பால்கரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது.

பால்கரில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

Tags :
|