Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Thu, 08 Oct 2020 5:55:45 PM

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,991 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது.

ariyalur district,corona virus,infection,treatment,deaths ,அரியலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,991 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,175 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 963 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags :