Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிலிப்பைன்சில் இன்று மேலும் 5032 பேருக்கு கொரோனா பாதிப்பு

பிலிப்பைன்சில் இன்று மேலும் 5032 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 02 Aug 2020 5:30:58 PM

பிலிப்பைன்சில் இன்று மேலும் 5032 பேருக்கு கொரோனா பாதிப்பு

பிலிப்பைன்ஸில் இன்று மேலும் 5,032 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இதனால் நாட்டில் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,185 ஆக அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 205க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி உள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் பலியாகி உள்ளனர்.

corona,action,philippines,authorities,call ,கொரோனா, நடவடிக்கை, பிலிப்பைன்ஸ், அதிகாரிகள், அழைப்பு

அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 20 அதிகரித்து 2,059 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே அமைச்சர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|