Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிப்பு

By: vaithegi Tue, 28 Feb 2023 12:22:05 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிப்பு

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 98 லட்சத்து 1 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,india,union ministry of health , கொரோனா,இந்தியா,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2257 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,771 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,53,343 ஆக பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து நாடு முழுவதும் இதுவரை 220,63,87,889 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,976 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags :
|
|