Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் இருந்து மருந்து ஏற்றி வந்த விமானிகளுக்கு கொரோனா தொற்று

சீனாவில் இருந்து மருந்து ஏற்றி வந்த விமானிகளுக்கு கொரோனா தொற்று

By: Nagaraj Sun, 10 May 2020 4:57:43 PM

சீனாவில் இருந்து மருந்து ஏற்றி வந்த விமானிகளுக்கு கொரோனா தொற்று

சீனாவில் இருந்து மருந்து ஏற்றி வந்த விமானிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சீனாவில் இருந்து மருந்து உள்ளிட்ட பொருட்களை விமானங்கள் மூலம் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதித்தவர்களுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து சரக்கு விமானம் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீனாவில் இருந்து மருந்து பொருட்களை ஏற்றி வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


5 pilots,corona,drug,air india,administration ,விமானிகள் 5 பேர், கொரோனா, மருந்து, ஏர் இந்தியா, நிர்வாகம்

கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக இந்த விமானிகள் சீனாவில் இருந்து மருந்து உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்துள்ளனர். இவர்களை பரிசோதனை செய்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், மும்பையை சேர்ந்த இந்த 5 விமானிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது போல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 18 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 64 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|
|