Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Mon, 12 Oct 2020 09:49:54 AM

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோன வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தனித மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

erode,corona virus,infection,treatment,kills ,ஈரோடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மேலும் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்து உள்ளது.

அதேநேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 130 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 76 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 1,099 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags :
|