Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Mon, 13 July 2020 11:12:26 AM

உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று உலக அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களை ஒப்பிடும்போது நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளில் 3 ஆயிரத்து 885 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்ததால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

global,corona,vulnerability,livelihood,brazil ,உலக அளவு, கொரோனா, பாதிப்பு, வாழ்வாதாரம், பிரேசில்

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும் 600 பேர் இறந்ததால் இறப்பு விகிதத்தில் பிரேசில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து 539 பேருடன் மெக்ஸிகோவும், 500 பேருடன் இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதேபோல் ரஷ்யா, பெரு, தென் ஆப்பிரிக்கா, ஈரான் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றிலக்கத்தில் உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் 205க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ளது. இதனால் பொருளாதாரம உட்பட மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|