Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆந்திராவில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திராவில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Wed, 15 July 2020 7:54:18 PM

ஆந்திராவில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் ஆந்திர மாநிலத்தில் நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2,432 பேருக்கு (20 பேர் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 35 ஆயிரத்தை எட்டிவிட்டது. இதுகுறித்து காதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதித்து 44 பேர் பலியாகியுள்ளதை அடுத்து ஆந்திரத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்துவந்த நிலையில், இன்று சுமார் இரண்டாயிரத்து ஐநூறாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 35,451 ஆக உள்ளது. நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 16,621 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

andhra,corona,vulnerability,increase,hospital ,ஆந்திரா, கொரோனா, பாதிப்பு, அதிகரிப்பு, மருத்துவமனை

கனடாவில் புதிதாக பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் நேற்று (செவ்வாய்கிழமை) மட்டும் 331 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், எட்டு பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அத்துடன், அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 486 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 72 ஆயிரத்து 170 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் எட்டாயிரத்து 798 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|