Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரானில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 333 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரானில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 333 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Mon, 27 July 2020 8:18:17 PM

ஈரானில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 333 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரானில் மேலும் 2,333 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 216 இறப்புகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,700 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து ஈரான் ஏப்ரல் மாதத்தில் முடக்க நடவடிக்கைகளை தளர்த்தத் தொடங்கியது. குறிப்பாக பள்ளிவாசல்கள், வணிக மையங்கள் மற்றும் பொது பூங்காக்களை மீண்டும் திறந்து மாகாணங்களுக்கு இடையில் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் அனுமதித்தது.

general assembly,regulation,iran,businesses,corona ,பொதுக்கூட்டம், கட்டுப்பாடு, ஈரான், வணிகங்கள், கொரோனா

கோம் மற்றும் தலைநகர் தெஹ்ரானில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது தென்மேற்கில் புதிய நோயாளிகள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். குறிப்பாக ஈராக்கின் எல்லையில் உள்ள குஜெஸ்தான் மாகாணத்தில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுஅக்தரை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரானியர்கள் பொது போக்குவரத்து மற்றும் மக்கள் சனத்தொகை அதிகளவில் உள்ள பகுதிகளில் முக்கவசத்தை அணிய வேண்டும் என ஜனாதிபதி ஹசன் ரௌஹானி வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், தெஹ்ரானில் அதிகாரிகள் சில வணிகங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|