Advertisement

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,753 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Tue, 14 July 2020 11:16:31 AM

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,753 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,51,695 ஆக உயர்ந்துள்ளது.

pakistan,coronavirus,corona death,corona prevalence ,பாகிஸ்தான், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் நேற்று 2 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,266 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1.61 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது. இந்தியா 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :