Advertisement

தமிழகத்தில் இன்று புதிதாக 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 05 July 2020 8:01:44 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு... தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,713 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய (ஜூலை 5) தொற்று விவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 34 ஆயிரத்து 831 மாதிரிகளுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 மாதிரிகளுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

tamil nadu,health,notification,corona,max ,தமிழகம், சுகாதாரத்துறை, அறிவிப்பு, கொரோனா, அதிகபட்சம்

இன்று மட்டும் 34 ஆயிரத்து 102 தனிநபர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. மொத்தமாக, 12 லட்சத்து 83 ஆயிரத்து 419 தனிநபர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 2,186 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 62 ஆயிரத்து 778 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இன்று உயிரிழந்தவர்களுள் 57 பேருக்கு ஏற்கெனவே இணை நோய்கள் இருந்துள்ளன. 3 பேர் இணை நோய்கள் அல்லாதவர்கள் ஆவர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. 46 ஆயிரத்து 860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,713 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|
|