Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 4, 462 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 95,538 மாதிரிகள் பரிசோதனை

தமிழகத்தில் புதிதாக 4, 462 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 95,538 மாதிரிகள் பரிசோதனை

By: Monisha Thu, 15 Oct 2020 10:01:48 AM

தமிழகத்தில் புதிதாக 4, 462 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 95,538 மாதிரிகள் பரிசோதனை

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 83 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 17 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 52 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,testing ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதன்படி, மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 93 ஆயிரத்து 844 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்து 40 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 95 ஆயிரத்து 538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 85 லட்சத்து 84 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :