Advertisement

கனடாவில் 24 மணிநேரத்தில் 513 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sat, 01 Aug 2020 3:03:21 PM

கனடாவில் 24 மணிநேரத்தில் 513 பேருக்கு கொரோனா பாதிப்பு

513 பேர் கொரோனாவால் பாதிப்பு... கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 513 பேர் பாதிப்படைந்ததோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 16ஆயிரத்து 312 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 935 பேர் உயிரிழந்துள்ளனர்.

canada,corona,24 hours,hospital,treatment ,கனடா, கொரானா, 24 மணிநேரம், மருத்துவமனை, சிகிச்சை

மேலும், ஆறாயிரத்து 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஆயிரத்து 227பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, இரண்டு ஆயிரத்து 249பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|