Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 02 Aug 2020 5:35:14 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், நாள்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா ஆஸ்பத்திரிகள், கொரோனா சுகாதார மையங்கள், கொரோனா பராமரிப்பு மையங்கள் என மூன்றடுக்கு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 65 ஆயிரத்து 103 ஆக உள்ளது.

india,corona virus,corona prevalence,corona death ,இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 54,736 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 853 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17,50,724 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,45,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 5,67,730 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா காரணமாக 37,364 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|