Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,488 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,488 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 13 Sept 2020 09:23:21 AM

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,488 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.88 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகளவில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

corona virus,russia,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், ரஷ்யா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,488 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 57 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 119 பேர் பலியாகினர்.

ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், அங்கு கொரோனா தொற்றில் இருந்து 8.73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. .

Tags :
|