Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Thu, 06 Aug 2020 2:14:57 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், நாள்தோறும் கொரோனாவினால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 904 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

corona virus,india,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,64,537 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 13.28 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 5.95 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 40,699 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது சற்று ஆறுதலடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து வருகிறது.

Tags :
|