Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 6,615 பேர் பாதிப்பு

கொரோனா காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 6,615 பேர் பாதிப்பு

By: Karunakaran Mon, 13 July 2020 2:37:34 PM

கொரோனா காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 6,615 பேர் பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளன.

4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 130 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் ரஷ்யாவில் கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது.

russia,coronavirus,corona prevalence,corona death ,ரஷ்யா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

கடந்த 24 மணிநேரத்தில் 6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 5 லட்சத்து ஓராயிரத்து 61 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் 3-வது இடத்தில் இருந்த ரஷ்யாவை இந்தியா பின்னுக்கு தள்ளியது. இதனால் ரஷ்யா கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் ரஷ்யாவில் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது.


Tags :
|