Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் ஒரே நாளில் புதிதாக 6,670 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் ஒரே நாளில் புதிதாக 6,670 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Sat, 08 Aug 2020 11:37:28 AM

கர்நாடகத்தில் ஒரே நாளில் புதிதாக 6,670 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 254 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 2 ஆயிரத்து 897 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 101 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 58 ஆயிரத்து 254 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 6,670 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 924 ஆக உயர்ந்திருக்கிறது.

karnataka,corona virus,infection,death,treatment ,கர்நாடகம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 84 ஆயிரத்து 232 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 3,951 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 77 ஆயிரத்து 686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் பெங்களூரு நகரில் 2,147 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 101 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் மட்டும் 69 ஆயிரத்து 572 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 1,200 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|