Advertisement

கொரோனா ஒவ்வொரு வருடமும் பாதிப்பை ஏற்படுத்தும்

By: Nagaraj Wed, 16 Sept 2020 10:13:31 AM

கொரோனா ஒவ்வொரு வருடமும் பாதிப்பை ஏற்படுத்தும்

ஒவ்வொரு வருடமும் பாதிப்பை ஏற்படுத்தும்... கொரோனா வைரஸ் பருவகால வைரஸாக, அதாவது ஒவ்வொரு வருடமும் பாதிப்பு ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள முடிவில், கொரோனா தொடர்ந்து உலகத்தில் இருக்கும் என்றும், HERD IMMUNITY எனப்படும் கூட்டமான எதிர்ப்பு சக்தியை மனிதர்கள் அடைகிற வரை ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

scientists,warning,corona,every year ,விஞ்ஞானிகள், எச்சரிக்கை, கொரோனா, ஒவ்வொரு வருடமும்

பொதுமக்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் விஞ்ஞானிகள் தற்போது எப்படி இருக்கிறோமோ, அதே போல் இனிவரும் காலங்களில் இருக்க வேண்டும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வின் மூலம் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளனர். அதில், வைரஸ்கள் மிதமான வெப்ப பகுதிகளில் குளிர்காலத்தில் உச்சம் பெறும், காற்றிலும், காற்றின் பரப்புகளிலும் வைரஸ் உயிர்வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டாக நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான தொற்றுகளின் மூலமாகவோ அல்லது தடுப்பூசிகள் மூலமாகவோ அடைந்து விட்டால், கொரோனா வைரஸ் பரவல் விகிதம் கணிசமாக குறையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Tags :
|