Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 13 Sept 2020 09:25:05 AM

பிரான்ஸில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா , பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது கொரோனா வைரசின் தாக்கம் ஐரோப்பிய நாடான பிரான்சில் குறைந்திருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது. பிரான்சில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 911 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,france,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பிரான்ஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

பிரான்சில் ஒரே நாளில் அங்கு கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. தற்போது கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. உலகளவில் கொரோனா தடுப்பு மருந்து ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|