Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரு நாட்டில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

பெரு நாட்டில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Mon, 17 Aug 2020 3:05:26 PM

பெரு நாட்டில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டாலும் கூட பிற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 6-வது இடத்தில் உள்ளது.

corona virus,peru,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பெரு, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

பெரு நாட்டில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.35 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 206 பேர் கொரோனா பாதிப்பிற்கு பலியாகினர்.

தற்போது பெரு நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3.65 லட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|