Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் நான்கு நாளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் நான்கு நாளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 12 July 2020 09:48:05 AM

அமெரிக்காவில் நான்கு நாளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.25 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.60 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

united states,corona  virus,corona prevalence,corona death ,அமெரிக்கா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த நான்கு நாளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான்காவது நாளாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 9-ம் தேதி 61,300 பேருக்கும் , 10-ம் தேதி 63,000 பேருக்கும், 11-ம் தேதி 71000 பேருக்கும் மற்றும் இன்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 நாளில் சுமார் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 33.5 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.37 லட்சத்தைக் கடந்துள்ளது. 14.90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :