Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 09 Aug 2020 11:49:05 AM

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.28 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 1.97 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona virus,united states,corona death,corona prevelence ,கொரோனா வைரஸ், அமெரிக்கா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 54,139 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 51.49 லட்சமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா, ரஷ்யா நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. பிரேசிலில் 30,13,369 பேருக்கும், இந்தியாவில் 21,52,020 பேருக்கும், ரஷியாவில் 8,82,347 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Tags :