Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Wed, 29 July 2020 08:58:03 AM

அமெரிக்காவில் ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 1.60 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா காரணமாக இதுவரை 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

united states,corona virus,corona prevalence,corona death ,யுனைடெட் ஸ்டேட்ஸ், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்கியது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 1,237 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் அங்கு இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்கியது.

Tags :