Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரு நாட்டில் ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

பெரு நாட்டில் ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 30 Aug 2020 09:31:02 AM

பெரு நாட்டில் ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 5-வது இடத்தில் உள்ளது.

தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8.44 லட்சத்தைக் கடந்துள்ளது.

corona virus,peru,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பெரு, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

பெரு நாட்டில் ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.39 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 136 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

தற்போது பெரு நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும் அங்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4.46 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|