Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவில் இருந்து மீண்ட இளம்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா...பெங்களூருவில் பரபரப்பு

கொரோனாவில் இருந்து மீண்ட இளம்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா...பெங்களூருவில் பரபரப்பு

By: Monisha Mon, 07 Sept 2020 4:42:37 PM

கொரோனாவில் இருந்து மீண்ட இளம்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா...பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூருவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளம்பெண் ஒருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஜுலை 6 ஆம் தேதி இளம்பெண் ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை முடிந்து நல்ல உடல் நிலையுடன் கடந்த ஜுலை 24 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாதம் அவருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என வந்தநிலையில் மருத்துவர்களிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு இதுவரை மீண்டும் கொரோனா வந்ததாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது முதல்முறையாக பெங்களூருவில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

corona virus,woman,infection,bangalore,symptoms ,கொரோனா வைரஸ்,இளம்பெண்,பாதிப்பு,பெங்களூரு,அறிகுறிகள்

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு அந்நோய்த் தொற்றுகளுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக்கப்பட்டு இருக்கும். ஏற்கனவே உடலில் ஒருநோய்க்கான ஆன்டிபாடிகள் இருக்கும்போது மீண்டும் அந்தத் தொற்றுநோய் உடலுக்குள் வருவதை செல்கள் அனுமதிக்காது. செல்களின் நினைவுத்திறனை வைத்து நோய்எதிர்ப்பு சக்தியை சுரந்து நமது உடல் அந்நோயில் இருந்து மீண்டுவிடும் என விஞ்ஞான உலகம் கூறுகிறது.

அப்படித்தான் கொரோனாவின் ஆரம்பக் கட்டத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் குறைந்தது 2 மாதம் என்ற அளவிற்கு மட்டுமே ஆன்டிபாடிகளை கொண்டிருக்கிறது. அதற்குப்பின் கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் இருந்து மறைந்து விடுகிறது. இது கொரோனா விஷயத்தில் பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்பட்டது.

தற்போது பெங்களூருவில் கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா உறுதிச் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
|