Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்.. ஜூலை 15 முதல் செலுத்திக் கொள்ளலாம்..

கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்.. ஜூலை 15 முதல் செலுத்திக் கொள்ளலாம்..

By: Monisha Thu, 14 July 2022 8:20:32 PM

கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்.. ஜூலை 15 முதல் செலுத்திக் கொள்ளலாம்..

தமிழ்நாடு: 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை ஜூலை 15ம் தேதி முதல் இலவசமாக செலுத்திக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பின்னர் சமூக இடைவெளி, ஊரடங்கு மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூலம் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி காரணமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.

எனினும் புதிது புதிதாக திரிபு அடைந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் என்பது மெல்ல அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முதலில் 2 தவணையாக தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தேவைப்படுவோருக்கு பூஸ்டர் டோஸும் போடப்பட்டு வருகிறது.

corona,booster,dose,free ,கொரோனா ,பூஸ்டர் ,டோஸ் ,இலவசம்,

தற்போது கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.இந்நிலையில், ‘18-59 வயதுக்குட்பட்டவர்கள் 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூலை 15ம் தேதி தொடங்கி 75 நாள் பொதுமக்கள் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

Tags :
|
|