Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாராவியில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா...புதிதாக 2 பேருக்கு பாதிப்பு

தாராவியில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா...புதிதாக 2 பேருக்கு பாதிப்பு

By: Monisha Mon, 27 July 2020 09:35:35 AM

தாராவியில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா...புதிதாக 2 பேருக்கு பாதிப்பு

நாட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நெருக்கம் மிகவும் அதிகம் உள்ள மும்பை தாராவியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருந்தது. எனினும் இந்த மாதம் ஒரு சில நாட்கள் அங்கு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அங்கு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.

maharashtra,corona virus,vulnerability,dharavi,world health organization ,மகாராஷ்டிரா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,தாராவி,உலக சுகாதார அமைப்பு

இதில் நேற்று தாராவியில் 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 2 ஆயிரத்து 531 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 168 பேர் குணமடைந்துவிட்டனர். தாராவியில் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் தாராவி உள்ளடக்கிய ‘ஜி’ வடக்கு வார்டின் மற்ற பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாகிமைவிட தாதரில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

நேற்று தாதரில் 29 பேருக்கும், மாகிமில் 22 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை அந்த 2 பகுதிகளில் மட்டும் 3,223 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :