Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது

ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது

By: Karunakaran Mon, 15 June 2020 12:31:01 PM

ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 215 நாடுகளுக்கும் மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 79.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4.34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் அடுத்து இரண்டாவதாக உள்ளது. பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.28 லட்சத்தைக் கடந்துள்ளது.

russia,coronavirus,corona infection,america ,ரஷ்யா,கொரோனா வைரஸ்,கொரோனா பாதிப்பு,அமெரிக்கா

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,835 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,28,964 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் காரணமாக 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 119 பேர் பலியாகியுள்ளதால், அங்கு கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து 2.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|