Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.40 லட்சத்தைக் கடந்தது

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.40 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Tue, 30 June 2020 11:14:24 AM

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.40 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் மற்றும் ரஷ்யா நாடுகள் உள்ளன.

coronavirus,russia,corona prevalence,corona death ,கொரோனா வைரஸ், ரஷ்யா, கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது. தற்போது ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.40 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 41 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 93 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|