Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Fri, 26 June 2020 11:11:17 AM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கியுள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

corona virus,corona death,corona infection,america ,அமெரிக்கா,கொரோனா பாதிப்பு,கொரோனா வைரஸ்,கொரோனா உயிரிழப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.26 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இருப்பினும் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தோரின் எண்ணிக்கை 10.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் பிரேசில் நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :