Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லேசான தொற்றை ஏற்படுத்தும் கொரானா; சிங்கப்பூரில் கண்டுபிடிப்பு

லேசான தொற்றை ஏற்படுத்தும் கொரானா; சிங்கப்பூரில் கண்டுபிடிப்பு

By: Nagaraj Fri, 21 Aug 2020 7:29:24 PM

லேசான தொற்றை ஏற்படுத்தும் கொரானா; சிங்கப்பூரில் கண்டுபிடிப்பு

லேசான தொற்றை ஏற்படுத்தும் கொரோனா... மிகவும் லேசான தொற்று மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சையால் உடனே குணம் அடைந்து விடுவதாகவும், அவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவதில்லை என்பதுடன் ஐசியூவில் அனுமதிக்கப்படும் அவசியமும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scientists,singapore,epidemiology,necessity ,விஞ்ஞானிகள், சிங்கப்பூர், தொற்றுநோய், அவசியம்

சிங்கப்பூர் தேசிய தொற்று நோய் ஆய்வுக் கழகம், டியூக்-என்யூஎஸ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த வைரஸ் ரகத்தை கண்டறிந்துள்ளதாகவும் தி லான்செட் தெரிவத்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படடுள்ளனர். இதனால் உயிர் பலியும் லட்சக்கணக்கில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :