Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்லாந்தில் 25 நாட்களுக்கு பின் 5 பேருக்கு கொரோனா உறுதி

தாய்லாந்தில் 25 நாட்களுக்கு பின் 5 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Sat, 20 June 2020 09:22:36 AM

தாய்லாந்தில் 25 நாட்களுக்கு பின் 5 பேருக்கு கொரோனா உறுதி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 86,21,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,57,338 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 45,65,421 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளது..

இந்நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருகின்றன. அந்தவகையில், தாய்லாந்தில் 25 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று பதிவாகாத நிலையில், தற்போது 5 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:- “தாய்லாந்தில் சுமார் 25 நாட்களாக உள்நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் தற்போது வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கொரோனா தொற்று உள்ளானவர்கள் சவுதியிலிருந்து வந்தவர்கள்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

thailand,coronavirus,saudi arabia,travel ,தாய்லாந்து,கொரோனா வைரஸ்,சவுதி அரேபியா,சுற்றுலா

தாய்லாந்தில் 3,146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 3,008 பேர் குணமடைந்துள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலாத் துறையில் அதிக வருமானம் ஈட்டும் தாய்லாந்தும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், சுற்றுலாப் பயணிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, தங்கும் விடுதிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும். விடுதிகளில் 50 சதவீத அளவில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் சமூக இடை வெளி உறுதி செய்யப்படும் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

Tags :